முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டாசு வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பட்டாசு தொடர்பான வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க இயலாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சுப்ரீம் கோர்ட் விதித்தது. அதில், 2 மணி நேரத்திற்கு மேலாக பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. காலை, மாலை என குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பசுமை பட்டாசுகளை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை சுப்ரீம் கோர்ட் விதித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்கள் மற்றும் அமைப்புகளில் இருந்து நூற்றுக்கணக்கான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.கே.சிக்கிரி ஓய்வு பெற்றதால், வழக்கு எஸ்.கே பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கக்கூடிய சூழ்நிலையில் இந்த பட்டாசு தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், பசுமை பட்டாசுகளை தயாரித்துள்ளதாகவும், வெடிப்பதற்கான கால நேரத்தை தளர்வு செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

ஆனால் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி எஸ்.கே.பாப்டே, அயோத்தி வழக்கு தொடர்பாக அரசியல் சாசன அமர்வில் உள்ளார். இன்னும் 3 நாட்களுக்கு அயோத்தி வழக்கு விசாரணை நடக்கவுள்ளது. அதன் பிறகே அவருக்கு பட்டியலிடப்பட்ட வழக்குகளை விசாரிப்பார் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், பட்டாசு வழக்கை விரைவில் விசாரிக்க கோரி மற்றொரு நீதிபதியான என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட் அதற்கான எந்த ஒரு இறுதி முடிவையும் வழங்கவில்லை. பட்டாசு வழக்கு பட்டியலிடப்பட்டால் அதற்கு சம்மந்தப்பட்ட நீதிபதி விசாரிப்பார் எனக் கூறி அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து