கரூர், சேலம், பொள்ளாச்சி வழித்தடங்களில் தமிழகத்திற்கு 3 புதிய ரயில்கள் - காணொலி மூலம் மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019      இந்தியா
new train tamilnadu 2019 10 15

புது டெல்லி : சிறிய நகரங்களை பெரிய நகரங்களுடன் இணைக்கும் சேவா ரயில் சேவையை டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலமாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் துவக்கி வைத்தார். தமிழகத்தில் கரூர், சேலம், பொள்ளாச்சி வழித்தடங்களில் 3 புதிய ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலத்தில் இருந்து ஒரு ரயில் சேவை மற்றும் கோவையில் இருந்து 2 ரயில்கள் இயக்கி வைக்கப்படுகின்றன.

கரூர், சேலம், பொள்ளாச்சி வழித்தடங்களில் இந்த ரயில் சேவை இயக்கப்படுகிறது. சேலத்தில் இருந்து கரூருக்கு தினமும் ரயில் சேவை தேவை என்ற கோரிக்கையை தொடர்ந்து, கடந்த 7 மாதங்களாக சேலத்தில் இருந்து கரூருக்கு தற்காலிக ரயில் சேவை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தற்போது நிரந்தர சேவையாக மாற்றம் செய்ய மத்திய ரயில்வே துறை முடிவெடுத்திருந்தது. அதன்படி நேற்று நிரந்தர ரயில் சேவையை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சி டெல்லி ரயில்வேத்துறை அலுவலகம், சேலம் சந்திப்பு ரயில் நிலையம், பொள்ளாச்சி மற்றும் கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்றது. சேலத்தில் இருந்து கரூருக்கு செல்லும் பயணிகள் ரயில் சேவையை சேலம் கொட்ட மேலாளர் மற்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் நேரில் சென்று துவக்கி வைத்தனர். இந்த ரயில் சேலத்தில் இருந்து 1.40 நிமிடத்திற்கு புறப்பட்டு 3.25 மணியளவில் கரூரை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையானது மல்லூரில் 1.54 மணிக்கும் பிறகு ராசிபுரத்தில் 2.05 மணிக்கும், கலங்காணி மற்றும் நாமக்கல் மோகனுர் வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் - கரூர் செல்ல ரூ.25 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல கோவையில் இருந்து பழனி ரயில் சேவையையும், பொள்ளாச்சியில் இருந்து பழனிக்குமான ரயில் சேவையையும் நேற்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் துவக்கி வைத்தார். இது போன்று நாடு முழுவதும் 9 மாநிலங்களில் 10 வழித்தடங்களில் புதிய ரயில் சேவைகள் தொடங்கப்பட்டது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து