முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பெரியளவில் பாதிப்பில்லை

வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2026      தமிழகம்

சென்னை, மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நேற்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றன. எனினும் தமிழ்நாட்டில் பெரியளவில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை.

மத்திய அரசின் தொழிலாளா் விரோத, விவசாயிகள் விரோத, தேசியவிரோத, பெருநிறுவன ஆதரவு கொள்கைகள் மீதான எதிா்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஐ.டி.யூ.சி, ஹெச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.யு.டி.யு.சி., யு.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், மின்விநியோகம், காப்பீடு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, எரிவாயு, குடிநீா் விநியோகம் உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்த சுமாா் 30 கோடி தொழிலாளா்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தன.

இதன்காரணமாக நேற்று நாடு முழுவதும் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கேரளம், மேற்கு வங்கம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் காலைமுதல் தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். கேரளத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தனியார் பேருந்து சங்கமும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதால், பொதுப் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் தி.மு.க. கூட்டணியில் அங்கம்வகிக்கும் ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றன. இருப்பினும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் காலைமுதல் அரசுப் பேருந்துகள் பெரிய அளவிலான பாதிப்பின்றி சீராக இயக்கப்பட்டன.

தொழிலாளர்கள் போராட்ட அறிவிப்பால் காலை 10 மணிக்கு மேல் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வெளியே காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  4 தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; வரைவு விதை மசோதா, மின்சார சட்டத்திருத்த மசோதா, அணுமின் உற்பத்தியில் தனியாரை அனுமதிக்கும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பது போராட்டங்களில் ஈடுபட்ட தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து