முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திரா பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு

வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2026      உலகம்
Suicide 2023 04 29

நியூயார்க், அமெரிக்காவில் விபத்தில் பலியான ஆந்திராவை சேர்ந்த பெண் குடும்பத்துக்கு 265 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

கடந்த 2023ஆம் ஆண்டு அமெரிக்காவில் காவல்துறை வாகனம் மோதியதில் பலியான ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாஹ்னவி கண்டுலா (23) என்ற இளம்பெண் குடும்பத்துக்கு ரூ.265 கோடியை வழங்க சியாட்டில் நகர நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் சியாட்டில் நகரிலுள்ள ‘நார்த் ஈஸ்டெர்ன்’ பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்து வந்த கண்டுலா, சாலையைக் கடக்கும்போது, வேகமாக வந்த காவல்துறை வாகனம் மோதி பலியானார்.

இது குறித்து வெளியான தீர்ப்பில், ஜாஹ்னவி கண்டுலா மரணம் இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. இந்த இழப்பீடு மூலம் கண்டுலா குடும்பத்துக்கு ஓரளவுக்கு நிவாரணம் கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, விபத்தை ஏற்படுத்திய காவலர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குடும்பத்தினர் போராடி வந்த நிலையில், இழப்பீடு குறித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து