டெல்லி மாரத்தானில் எத்தியோப்பியா வீரர் மற்றும் வீராங்கனை முதலிடம்

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019      விளையாட்டு
delhi marathan ethiyopes players first 2019 10 21

புது டெல்லி : டெல்லி மாரத்தானில் எத்தியோப்பியா வீரர், வீராங்கனை முதலிடம் பிடித்தனர்.

15-வது டெல்லி அரை மாரத்தான் பந்தயம் டெல்லியில் நடந்தது. போட்டியை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தொடங்கி வைத்தார். இதில் ஆண்கள் பிரிவில் நடப்பு சம்பியன் எத்தியோப்பியா வீரர் அன்டம்லக் பெலிஹூ 59 நிமிடம் 10 வினாடிகளில் இலக்கை கடந்து பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். பெண்கள் பிரிவில் எத்தியோப்பியாவின் செஹாய் ஜெமிச்சு 66 நிமிடங்களில் முதலாவது வந்து பட்டத்தை தட்டிச் சென்றார். இதர பிரிவுகளில் பல வீராங்கனைகள் காற்று மாசு காரணமாக முக கவசம் அணிந்தபடி ஓடினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து