முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.வெ.க.வில் சட்டசபை தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமனம்: விஜய் உத்தரவு

சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2026      தமிழகம்
vijay 2025-01-17

சென்னை, த.வெ.க. சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-

வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தேர்தல் பணிகளைக் கண்காணிக்க, சட்டமன்றத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சட்டமன்றத் தேர்தல் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக என். ஆனந்த், கே.ஏ. செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

எனது நேரடி ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி இந்தத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இயங்குவார்கள். தலைமைக் கழக மையத் தேர்தல் அலுவலகத்தின்  துணையுடன் தலைமைக் கழகம் அளிக்கும் நெறிமுறைகளுக்கு உள்பட்டு இவர்கள் செயல்படுவார்கள். குறிப்பாக, மாவட்ட வாரியாகவும் தொகுதி வாரியாகவும் தேர்தல் முன் தயாரிப்புப் பணிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டங்களை இவர்கள் ஒருங்கிணைப்பார்கள்.

இந்தப் பணிகளைப் பொதுச் செயலாளர் என். ஆனந்த் உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல் முதன்மைக் கண்காணிப்பாளர்களின் உறுதுணையோடு ஒருங்கிணைக்க உள்ள மாவட்ட வாரியான தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு. இணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் த.வெ.க.வின் அனைத்து நிலை நிர்வாகிகளும் தோழர்களும், அவர்களது பொறுப்பு மாவட்டங்கள் சார்ந்து, முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்” என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து