முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க பல்கலைக் கழகத்தில் போதை பொருள் தயாரித்த 2 பேராசிரியர்கள் கைது

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் தயாரித்த பேட்மேன் மற்றும் ரோலண்ட் ஆகிய இரண்டு பேராசிரியர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள அர்காடெல்பியா ஹெண்டர்சன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியர்களாக பணியாற்றி வந்தவர்கள் டெர்ரி டேவிட் பேட்மேன் (வயது 45) மற்றும் பிராட்லி ஆலன் ரோலண்ட் (40).இவர்கள் இருவரும் இணைந்து, பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை தயாரித்தனர். பல்கலைக்கழகத்தின் அறிவியல் மையத்தில் ரசாயன நெடி ஏற்பட்டதை தொடர்ந்து, நடத்திய விசாரணையில் பேராசிரியர்கள் இருவரும் போதைப்பொருள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அவர்கள் இருவரையும் பல்கலைக் கழக நிர்வாகம் கட்டாய விடுப்பில் அனுப்பியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பேராசிரியர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பேட்மேன் மற்றும் ரோலண்ட் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் தயாரித்தது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் தலா 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அமெரிக்க சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து