முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவாவில் சர்வதேச திரைப்பட விழா ரஜினிக்கு கவுரவ விருது வழங்கப்பட்டது

புதன்கிழமை, 20 நவம்பர் 2019      சினிமா
Image Unavailable

கோவா : கோவாவில் 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இதனை நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இந்திய அரசின் திரைப்படத்துறை சார்பில் கோவாவில் 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது.  இந்த விழாவை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் இந்திய சினிமா துறையில் பெரிய பங்களிப்பு செய்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விழாவில் 76 நாடுகளை சேர்ந்த 200 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. 26 இந்திய படங்களும் திரையிடப்பட உள்ளன. தமிழ் படங்கள் சார்பில் பார்த்திபனின் ஒத்த செருப்பு மற்றும் ஹவுஸ் ஓனர் ஆகிய 2 படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தியில் இருந்து கல்லிபாய், சூப்பர் 30, பதாய் ஹோ, உரி:சர்ஜிக்கல் ஸ்டிரைக் உள்ளிட்ட படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்த விழாவில், சிறப்பு தபால் தலை வெளியிடபட்டது. பின்னர் நடிகர் ரஜினிகாந்துக்கு “ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி“ விருது வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர் அமிதாப் பச்சன் இணைந்து ரஜினிக்கு விருதை வழங்கினர்.

இதையடுத்து விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்களுக்கு விருதை சமர்ப்பிக்கிறேன். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கோவா முதல்வர், எனக்கு முன்மாதிரியாக திகழும் அமிதாப்பச்சனுக்கு நன்றி. ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி விருது பெற்றதில் மகிழ்ச்சி. எனக்கு விருது வழங்கி கவுரவித்த இந்திய அரசுக்கு நன்றி என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து