சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரியை சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019      இந்தியா
Arun Shourie-PM Modi 2019 12 08

மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மோடி புனே நகரில் உள்ள மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரியை சந்தித்து நலம் விசாரித்தார்.

பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான முன்னாள் மத்திய அரசில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் அருண் ஷோரி. பிரபல பொருளாதாரத்துறை நிபுணர், பத்திரிகை ஆசிரியர், சிறந்த அரசியல் விமர்சகர், தேர்ந்த கட்டுரையாளர் என பன்முகத்திறமை கொண்ட அருண் ஷோரி(74)  கடந்த முதல் தேதியன்று உடல்நலக்குறைவால் புனே நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி புனே நகரில் உள்ள ரூபி கிளினிக் மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரியை நேற்று மாலை சந்தித்து நலம் விசாரித்தார். அருண் ஷோரி நலமுடன் வாழ நாங்கள் பிராத்திக்கிறோம் என்ற குறிப்புடன் அருண் ஷோரியை சந்தித்துப் பேசும் புகைப்படங்களை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து