முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2020      அரசியல்
Image Unavailable

நான் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று நிறைய பேர் நினைத்தார்கள். உண்மையில் மராட்டிய மக்களும், இளைஞர்களும் அதற்கு அனுமதிக்கவில்லை என்று சரத்பவார் கூறியுள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது தனது கடுமையான உழைப்பால் கட்சியை பல இடங்களில் வெற்றி பெற செய்தார். அதே போல் சிவசேனாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க அச்சாணியாகவும் விளங்கினார். இந்த நிலையில் சரத்பவார் பர்பானியில் உள்ள கிருஷி விக்யான் கேந்திரத்தில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி தொடக்க விழாவில் கலந்து கொண்டார். விழாவில் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சரத்பவார் பேசியதாவது:-

நான் எனது பேச்சை தொடங்கும் முன்பு அவர்கள் (உத்தவ் தாக்கரே மற்றும் அஜித்பவார்) எனக்கு பூங்கொத்து கொடுத்தனர். இதை பார்க்க அவர்கள் என்னை ஓய்வுபெற அறிவுறுத்துவது போல் உள்ளது. இதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நான் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று நிறைய பேர் நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. உண்மையில் மராட்டிய மக்களும், இளைஞர்களும் அதற்கு அனுமதிக்கவில்லை. உலகெங்கிலும் விவசாயம் மாறி வருகின்றன. புதிய கண்டுபிடிப்புகள், உற்பத்தி ஆகியவையும் அதிகரித்துள்ளது. இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் மக்கள் தேவையை பூர்த்தி செய்யும் அவசியமான துறையாக விவசாயம் உள்ளது. எனவே தான் இந்த துறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது, வளர்ச்சியை ஏற்படுத்துவது மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பது தேவைப்படுகிறது. இது விவசாயிகளின் வீட்டு வாசலை சென்று சேர்வதையும் உறுதி செய்ய வேண்டி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து