ரஷ்யாவில் பனியில் புரண்டு விளையாடிய சர்க்கஸ் யானையின் வீடியோ வைரல்

புதன்கிழமை, 29 ஜனவரி 2020      உலகம்
circus elephant play snow 2020 01 29

நோவஸிபிர்ஸ்க் : ரஷ்யாவில் சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட யானைகளில் ஒன்று அங்கிருந்த சாலைகளில் நிரம்பியிருந்த பனியில் புரண்டு விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஷ்யாவின் உள்ள இத்தாலிய சர்க்கஸ் நிறுவனத்திற்கு சொந்தமானவை கார்லா, ரன்னி யானைகள். சம்பவத்தன்று ரஷ்யாவின் யாக்டெரின்பர்க் நகரில் இந்நிறுவனம் சர்க்கஸ் கண்காட்சி நடத்தியது.அதன் பின்னர் மற்றொரு நகரில் நடைபெற உள்ள சர்க்கஸ் கண்காட்சிக்கு செல்வதற்காக கார்லா, ரன்னி யானைகளை சர்க்கஸ் ஊழியர்கள் லாரிகளில் ஏற்ற முயன்றனர். ஆனால் யானைகள் வண்டியில் ஏற மறுத்தன. ஊழியர்களின் சொல் கேளாமல் கார்லா என்ற பெண் யானை சாலைக்கு சென்றது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் உள்ள பனியில் முன்னங்கால்களை மடக்கி உட்கார்ந்த யானை பின்னர் புரண்டு விளையாடியது. இதை பலரும் வீடியோ எடுத்தனர். சில மணித்துளிகள் யானைகள் விளையாடிய பின்னர் ஊழியர்கள் அவற்றை வண்டியில் ஏற்றி கொண்டு சென்றனர். பனியில் புரண்டு விளையாடிய யானையின் வீடியோ சமூக வலதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து