முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: விமான நிலையங்களில் பயணிகளிடம் சோதனை: தமிழகத்தில் ஒரு லட்சம் முக கவசங்கள் தயார் - சுகாதார துறை செயலாளர் அறிவிப்பு

புதன்கிழமை, 29 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்தில் ஒரு லட்சம் முக கவசங்கள் தயார் நிலையில் உள்ளது என்று தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா  ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார். விமான நிலைய உயர் அதிகாரிகளுடன் பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்பு குறித்து ஆலோசனை நடத்திய பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கேனிங் மூலம் சீனாவில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனை செய்யப்படுகிறார்கள். இதுவரையில் 15 ஆயிரம் பயணிகளுக்கு இது போன்ற சோதனை நடத்தப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் இந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 2 விதமான ஸ்கேனிங் செய்யப்படுகிறது. சுய சோதனை படிவம் கொடுக்கப்பட்டு காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்ற பாதிப்பு இருந்தால் ‘டிக்‘ செய்து கொடுக்க வேண்டும். அதே போல தெர்மல் பரிசோதனையும் செய்யப்படுகிறது.

யாருக்கும் பாதிப்பில்லை

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இருந்தால் உடல் வெப்ப நிலையை வைத்து கண்டுபிடித்து விடலாம். கொரோனா அறிகுறி இருக்குமானால் அவர்களுக்கு 9 விதமான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. சூட், முக கவசம், கையுறை உள்ளிட்ட பொருட்கள் கொடுக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் சேர்க்கப்படுவார்கள். இதுவரையில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. சீன நாட்டை சேர்ந்த 60 பேர் தமிழகத்தில் வந்து தங்கி இருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சீனாவில் உள்ள தமிழக மாணவர்கள் மற்றும் பணி செய்யக் கூடியவர்களுக்கு வேண்டிய உதவி செய்து தரப்படும். கொரோனா சிகிச்சை அளிக்கக் கூடிய டாக்டர்கள், நர்சுகளுக்கு பயிற்சியும், பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் பயன்படுத்தும் லிப்ட், நகரும் படிக்கட்டு உள்ளிட்ட அவர்கள் கடந்து செல்லும் பகுதியினை சுத்தமாக வைக்கவும் விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக கவசங்கள் தயார்

கொரோனா வைரஸ் உஷார் நடவடிக்கைக்காக ஒரு லட்சம் முக கவசங்கள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் ஓட்டல், பார்க், தியேட்டர். மால்கள் போன்ற பொது இடங்களுக்கு சென்று வந்தால் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். அசைவ உணவுகளை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 51 பேர் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாகவும் அவர்கள் 28 நாட்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து