முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் விவகாரம்: அமைச்சர் பெரியசாமி கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 7 டிசம்பர் 2025      தமிழகம்
Periyasamy 2023-09-02

திண்டுக்கல், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கோர்ட் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டமில்லை என அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருப்பரங்குன்றம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். மேல்முறையீடு செய்வது அடிப்படை உரிமை. கோர்ட் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம் இல்லை. அதற்கு சட்டமே வழிவகுத்து இருக்கிறது. உரிமை பெறுவதற்கு சுப்ரீம் கோர்ட் வரை செல்லலாம் என்று சட்டம் கூறுகிறது. அதனால் சுப்ரீம் கோர்ட்டை நாடி இருக்கிறோம்.

த.வெ.க. அரசியல் கட்சியாக இன்னும் அங்கீகாரமே பெறவில்லை. அரசியல் கட்சியாக இருந்தால் நிச்சயம் கருத்து கூறுவார்கள். ஒரே இரவில் ஆத்தூர் தொகுதியில் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி 6 ஆயிரம் பேரையும், இறந்தவர்கள் என்று 16 ஆயிரம் பேரையும் என மொத்தம் 22 ஆயிரம் வாக்காளர்களை நீக்கிவிட்டனர். அதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் அனுப்பி இருக்கிறேன். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முறையாக நடைபெறவில்லை. எனவே மத்திய அரசு இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து