முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்றும் சமத்துவ தீபம் எரியும் தமிழகத்தில் வளர்ச்சியின் ஒளி பெருகும்: முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 7 டிசம்பர் 2025      தமிழகம்
CM 2024-05-31

சென்னை, தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும் என்றும், தமிழ்நாட்டில் வளர்ச்சியின் ஒளி பெருகும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மதுரையில் கட்டப்பட்டுள்ள மேலமடை பாலம் மற்றும் நலத்திட்ட உதவிகள் மற்றும் மதுரை நகருக்கு முல்லை பெரியாறு குடிநீர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை வந்தார். 

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை நேற்று திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மதுரைக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்தநிலையில், தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும் என முதல்வர்  மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம், பிரம்மாண்டமான கீழடி அருங்காட்சியகம், உலகத் தரத்தில் ஹாக்கி மைதானம், இவைதான் நமது திராவிட மாடல் பேசும் மதுரைக்கான வளர்ச்சி அரசியல். எய்ம்ஸ் வராது, மெட்ரோ ரயில் தராது; கீழடி ஆய்வறிக்கையை மறைக்கும். இதுதான பா.ஜ.க. பேசும் அரசியல். தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும். வளர்ச்சியின் ஒளி பெருகும் என அதில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து