முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலாலா - கிரெட்டா துன்பர்க் சந்திப்பு படம் வைரல் ஆகிறது

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

பிரிட்டன் : கிரெட்டா துன்பர்க் மற்றும் மலாலா இருவரும் பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

பாகிஸ்தானை சேர்ந்த மலாலா (22) ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்த நிலையில் லண்டனில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கு பெற்ற கிரெட்டா துன்பர்க்கைச் சந்தித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தங்கள் சந்திப்பை புகைப்படங்களாக எடுத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் இருவரும் பதிவிட்டனர்.மலாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கிரெட்டா துன்பர்க்கிடம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டு, நன்றி என்று இதய வடிவிலான எமோஜியுடன் பதிவிட்டிருந்தார். பொது வாழ்க்கையில் இளம் பெண்களின் அடையாளமாக மாறியுள்ள இவ்விருவரும் இணைந்து புகைப்படம்  எடுத்துக் கொண்டதற்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யூசுப்சாய், பெண்களின் கல்விக்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். 15 வயதுச் சிறுமியாக இருந்த அவரை கடந்த 2012 - ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில் அப்போது உயர் தப்பினார் மலாலா என்பது குறிப்பிடத்தக்கது.

உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போதிலும் தொடர்ந்து பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுத்தார் மலாலா. இதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்குக் கிடைத்தது. உலகிலேயே மிகவும் இளம் வயதில் நோபல் பரிசு பெறுபவர் என்ற பெருமைக்கும் மலாலா சொந்தக்காரர் ஆனார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து