முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பீகார் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை : வி.சி.க. தலைவர் திருமாவளவன்

வெள்ளிக்கிழமை, 31 அக்டோபர் 2025      தமிழகம்
Thirumavalavan 2023 07 30

Source: provided

சென்னை : பீகார் மக்களுக்கு தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று திருமாவளவன்  கூறினார்.

பீகார் தேர்தல் பிரசாரத்தின்போது தமிழகத்திலுள்ள பீகார் மக்கள் குறித்து பிரதமர் பேசியது தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், விசிக தலைவர் திருமாவளவன் இது தொடர்பாக பேசியதாவது;-

பீகாரிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புலம்பெயர் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு இங்கே எந்த பிரச்சினையும் இல்லை. தமிழகத்திலுள்ள பீகார் மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியது அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு. இது ஆபத்தான அணுகுமுறை. பீகாரில் வாக்குகளை பெறுவதற்காக பாஜக இத்தகைய அரசியலை செய்கிறது.

பிரதமரே இப்படி பேசியிருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. பிரதமரின் இந்த கருத்து ஏற்கத்தக்கது அல்ல. பீகாரை சார்ந்தவர்கள் தமிழகத்தில் ஏதேனும் புகார் அளித்தார்களா? அதற்கு ஆதாரம் இருக்கிறதா என தெரியவில்லை. பிரதமரின் பேச்சை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ” என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து