டெல்லி வன்முறை சம்பவம்: மத்திய அரசுக்கு ரஜினிகாந்த் கண்டனம்

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2020      தமிழகம்
rajinikanth 2020 02 26

டெல்லி வன்முறை சம்பவத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால்தான் முதல் ஆளாக நிற்பேன் என்று கூறியிருந்தேன். உளவுத்துறையின் தோல்வி தான் டெல்லி வன்முறைக்கு காரணம். மத்திய அரசின் உளவுத்துறை சரியாக செயல்படவில்லை. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி இருக்க வேண்டும். போராட்டம் வன்முறையாக மாறக் கூடாது. அமைதியாக நடைபெறலாம். டெல்லி போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படும். குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்ன போராடினாலும் மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்பப் பெறாது என நினைக்கிறேன். சில கட்சிகள் மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். சில பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களே என்னை பா.ஜ.க.வின் ஊதுகுழல், பா.ஜ.க. என் பின்னால் உள்ளது என கூறுகிறார்கள். என்ன உண்மையோ அதை சொல்கிறேன், என் பின்னால் பா.ஜ.க. இப்பதாக கூறுவது வருத்தமளிக்கிறது. இவ்வாறு ரஜினி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து