எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சி : தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தமிழகத்தில் தீர்மானம் கொண்டு வரப்படுமா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அரசின் பரிசீலனையில் உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் உள்ள அகண்ட காவிரியில் 1836-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மேலணை கட்டப்பட்டது. இதில் காவிரி ஆற்றில் 41 கண் மதகு கொண்ட மேலணையும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் உபரி நீரை திறந்து விடும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் 45 கண் மதகுகள் கொண்ட மேலணையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ம் தேதி அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக கொள்ளிடம் தெற்கு மேலணையில் உள்ள 45 மதகுகளில் 6 முதல் 14 வரையிலான 9 மதகுகள் இடிந்து விழுந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. 630 மீட்டர் நீளமுள்ள மொத்த அணையில் 110 மீட்டர் அளவுக்கு சேதமடைந்து தண்ணீர் வெளியேறியது. மேலணை மதகுகள் உடைந்த பாலம் துண்டானதால் அந்த வழியாக போக்கு வரத்து தடை செய்யப்பட்டது. முக்கொம்பு மேலணை உடைந்த மறுநாளே அங்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி , மேலணையில் இருந்து 100 மீட்டர் தள்ளி புதிய கதவணை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், முழுமையாக இரண்டு பக்கங்களிலும் காவிரி தவிர்த்து கொள்ளிடத்தில் மட்டும் அணை கட்டப்படும் என்றும் தெரிவித்தார். இந்த அணை ரூ.387.60 கோடி மதிப்பில் கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதன்படி முக்கொம்பில் புதிய அணை கட்டும் பணி கடந்த 6-3-2019 அன்று தொடங்கப்பட்டது. தொடர்ந்து பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முக்கொம்பு அணை கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சையில் நேற்று நடைபெற்ற வைத்திலிங்கம் எம்.பி. இல்ல திருமண விழாவில் பங்கேற்று விட்டு திருச்சி வந்த அவர் முக்கொம்பு அணைக்கு சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொதுப்பணித்துறை என்ஜினீயர்களிடம் பணிகள் குறித்த விவரங்களை கேட்ட றிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வெள்ளத்தால் இடிந்து விழுந்த முக்கொம்பு கொள்ளிடம் அணைக்கு மாற்றாக புதிதாக ரூ. 387.60 கோடி மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை 31-1-2021க்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 484 பைல்களில் 287 பைல்கள் முடிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 1650மீட்டர் நீளமுள்ள அடித்தளசுவரில் 711 மீட்டர் நீளமுள்ள அடித்தள சுவர் முடிக்கப்பட்டுள்ளன. 1532 மீட்டர் நீளமுள்ள குறுக்கு வெட்டுச்சுவரில் 500 மீட்டர் நீளமுள்ள குறுக்கு வெட்டுசுவர் முடிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 7800 எண்ணிக்கையிலான கான்கிரீட் பிளாக்குகளில் (சி சி பிளாக்ஸ்) 1489 கான்கிரீட் பிளாக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. 55 எண்ணிக்கையிலான மதகு கதவுகளில் 45 மதகு கதவுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தினர் இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றனர் என்று தெரிவித்தார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- கர்நாடகாவில் மேகதாதுவின் குறுக்கே மீண்டும் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
பதில்:- காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வந்து விட்டது. காவிரியில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தடுக்கவோ, திருப்பி அனுப்பவோ கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தெளிவான தீர்ப்பினை கூறிவிட்டது. இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை.
கேள்வி:- காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் திருச்சி, அரியலூர், கரூர் மாவட்டங்களை சேர்க்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்களே?
பதில்:- விவசாயிகள் தரப்பில் இருந்து எனக்கு எந்த கோரிக்கையும் வரவில்லை. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் வாயு இருக்கும் பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததன் அடிப்படையில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளோம்.
கேள்வி:- அ.தி.மு.க. ராஜ்யசபா வேட்பாளர்களை முடிவு செய்து விட்டீர்களா?
பதில்:- தலைமைக்கழகத்தின் மூத்த நிர்வாகிகள் கூடி முடிவு செய்வார்கள்.
தே.மு.தி.க.வுக்கு எம்.பி. பதவியா?
கேள்வி:- தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, தங்கள் கட்சிக்கு மேல்சபை எம்.பி. வேண்டும் என்று கேட்டுள்ளாரே?
பதில்:- கேட்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. எங்கள் கட்சியில் மூத்த தலைவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இருப்பினும் கட்சி தலைமை கூடி இதுபற்றி முடிவு எடுக்கும்.
கேள்வி:- பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (என்.ஆர்.சி.க்கு) எதிராக தீர்மானம் போட்டுள்ளனரே? அது போல் தமிழகத்திலும் வாய்ப்பிருக்கிறதா?
பதில்:- அவையெல்லாம் அரசின் பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 20 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? - விஜய் கேள்வி
20 Sep 2025நாகை, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீதா என்று முதல்வருக்கு விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
டி-20-யில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்
20 Sep 2025அபுதாபி, டி-20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
ஓமன் அணிக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்தது: சூர்யகுமார்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி லீக் ஆட்டம்...
-
சென்னை குடிநீர் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, சென்னையில் குடிநீர் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி
20 Sep 2025நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
சிறப்பாக பந்து வீசியது: ஓமன் அணிக்கு சாம்சன் புகழாரம்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.