முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலை 26-ல் நீட் தேர்வு; நாடு முழுவதும் வரும் கல்வியாண்டில் புதிய கல்விக்கொள்கை அமல் : மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

செவ்வாய்க்கிழமை, 5 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி : மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டலை அடுத்து கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு மத்திய அரசின் கல்விக் கொள்கை தொடர்பான புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு - 2019-ஐ கடந்தாண்டு வெளியிட்டது. இந்த கல்விக் கொள்கை வரைவு இந்தியை திணிக்கும் நோக்கத்தில் உள்ளதாகவும், ஏழை மாணவர்களின் கல்வியை பறிக்கும் செயலாக உள்ளது எனவும் தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாம் மொழியாக இந்தி கட்டாயம் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து கட்டாயம் என்பது நீக்கப்பட்டு,   விரும்பினால் பயிற்றுவிக்கலாம் என்று மாற்றப்பட்டது.

இந்த வரைவு அறிக்கை தொடர்பாக கடந்தாண்டு ஜூலை 31-ம் தேதி வரை கருத்துகளை தெரிவிக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அவகாசம் அளித்தது. இந்த வரைவு  அறிக்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் நாட்டில் பல இடங்களில் ரகசியமாக நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே, நாடு முழுதும் சுமார் 2 லட்சம் பேர் தங்களது கருத்துக்களை அனுப்பி உள்ளனர். இதனையடுத்து மாநில கல்வி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. தற்போது, அனதை்து   கருத்துகளையும் ஆய்வு செய்து இறுதி வரைவு அறிக்கையை மத்திய அரசு தயாரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி புதிய கல்விக்கொள்ளை இறுதி அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், விரைவில் புதிய  கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மாணவர்களுடனான ஆன்லைன் உரையாடலில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், வரும் கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஜூலை 26-ம் தேதி மருத்துவப்படிக்கான நீட் தேர்வு நடைபெறும் என்றும், ஜே.இ.இ. தேர்வுகள் ஜூலை 18 முதல் ஜூலை 23 வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து