அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு: மத்திய அரசின் முடிவுக்கு மம்தா வரவேற்பு

வியாழக்கிழமை, 18 ஜூன் 2020      அரசியல்
Mamata-Banerjee 2020 06 18

அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும் முடிவை நாடும், ஆயுதப்படைகளும் முழுமையாக ஆதரிக்கின்றன. தொழில்நுட்ப ரீதியாக இது சரியான முடிவு என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வரும் நிலையில், லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்தினரும் மோதிக் கொண்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து விவாதிக்க வருகிற 19-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
நெருக்கடியான இந்த நேரத்தில் நாட்டிற்கு ஆதரவாக எங்கள் கட்சி நிற்கும். அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும் முடிவை நாடும், ஆயுதப்படைகளும் முழுமையாக ஆதரிக்கின்றன. தொழில்நுட்ப ரீதியாக இது சரியான முடிவு என்று தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான எல்லை நிலைப்பாடு குறித்து அவரிடம் எழுப்பட்ட கேள்விக்கு, வெளி விவகாரங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும், இது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் எனவும் அவர் பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து