முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2025      இந்தியா
Election Commissioner

Source: provided

புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

243 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 22-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்பாக தேர்தலலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. கடந்த 2020-ம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28 முதல் நவம்பர் 7 வரை 3 கட்டங்களாக நடைபெற்றது. அக்டோபர் 28-ம் தேதி 71 தொகுதிகளுக்கும், நவம்பர் 3-ம் தேதி 94 தொகுதிகளுக்கும், நவம்பர் 7-ம் தேதி 78 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10-ம் தேதி அறிவிக்கப்பட்டன.

அதேபோல், இம்முறையும் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. பீகாரின் மிகவும் முக்கியமான பண்டிகையான சாட் பூஜை அக்டோபர் 28-ம் தேதி வருகிறது. எனவே, அந்த பண்டிகைக்குப் பிறகு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

பீகாரில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அடுத்த வாரம் அம்மாநிலத்துக்குச் செல்ல உள்ளார். மேலும், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அதன்படி, மாநில இறுதி வாக்காளர் பட்டியல் செப்.30-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. எனவே, ஞானேஷ் குமாரின் பீகார் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. பெயர் விடுபட்டவர்கள், தகுந்த ஆவணங்களுடன் சேர்க்க தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளித்தது. எனவே, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்போதுதான், எவ்வளவு வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்பதன் உண்மை நிலவரம் தெரியவரும். பெயர் நீக்கத்தில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், சிறப்பு தீவிர திருத்த நடைமுறை முழுமையாக ரத்து செய்யப்படும் என்று சுப்ரீம் கோர்ட் ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து