முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 13 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

திங்கட்கிழமை, 22 செப்டம்பர் 2025      தமிழகம்
CM-4-2025-09-22

சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது., 

தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை முழுமையாகவும் செம்மையாகவும் செயற்படுத்திடும் வகையில் 1958-ஆம் ஆண்டு ஆட்சி மொழிக்குழு உருவாக்கப்பட்டு, ஓர் ஆய்வுத் தனி அலுவலர் பணியிடம் உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் 1972 இல் இப்பணியிடத்துடன் சேர்த்து ஒன்பது ஆய்வுத் தனியலுவலர் பணியிடங்களாக உருவாக்கப்பட்டன.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவலகக் கட்டமைப்பு சீரமைக்கப்பட்டு தமிழாய்வு அலுவலர் என்ற பதவிப் பெயரினை மாற்றி ஒருமுகமாக உதவி இயக்குநர் பணியிடங்கள் என 1998 ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தியதற்கிணங்க, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நிறைவு செய்திட அரசாணை வெளியிடப்பட்டது.

இளங்கலை மற்றும் முதுகலை தமிழிலக்கியம் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட 13 நபர்களுக்கு உதவி இயக்குநர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்  நேற்று வழங்கினார். தமிழ் இலக்கியக் கல்வி கற்றவர்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர்களாகப் பணி வாய்ப்புப் பெற்றுள்ளது தமிழுக்கான நற்காலம் மட்டுமல்ல பொற்காலமுமாகும்.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து