முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 2 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 2020 மார்ச் மாதம் இந்தியாவில் பரவ தொடங்கியது. உடனே மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இதனால் நோய்த் தொற்று பரவல் கட்டுப்படும் என்று கருதினர்.

மாறாக நாள்தோறும் புதிய நோயாளிகள் அதிகரித்துக் கொண்டே சென்றனர். புதிய நோயாளிகள் அதிகரித்தாலும் குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் இறப்போரின் சதவிகிதம் குறைவதும் ஆறுதல் அளிக்கக் கூடிய செய்தியாக உள்ளது.

இதற்கிடையில், இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். சாமானியர்கள் முதல் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் வரை பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. 

முன்னதாக, தமிழகத்தில் கொரோனா சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அதனையடுத்து 112 தனியார் மருத்துவமனைகளை கொரோனா சிகிச்சை மருத்துவமனைகளாக அரசு அறிவித்தது.

மேலும், அங்கு சிகிச்சை பெற விருப்பப்படுபவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது.  அதன் பின்னர் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்தது. 

இந்த  கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனிடையே முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை இருந்தால் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. எனினும், தமிழகத்தில் பல மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் பேக்கேஜ் என்ற பெயரில்  லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து சில ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது.  இதையடுத்து  அந்த மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீரென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இந்நிலையில் இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரம் தெளிவாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்த சென்னை கீழ்ப்பாக்கம் Bewell தனியார் மருத்துவமனைக்கு, கொரோனா சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது, என்றும் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து