புதிய ஊரடங்கு குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பரிசீலனை?

திங்கட்கிழமை, 3 ஆகஸ்ட் 2020      உலகம்
Boris Johnson 2020 08 03

Source: provided

லண்டன் : இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் புதிய ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனா உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 209-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.92 லட்சத்தை தாண்டியது.

இந்ங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 46,201 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 304,695 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடியில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கூறப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போரிஸ் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது.  அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸ் காரணமாக இருந்த கட்டுப்பாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகின்றன. ஆனால் அது மக்களுக்கு எளிதாக புரியும் படி இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

அதாவது, பள்ளிகள் திறக்கப்படுவது, பப்கள் மூடப்படுவது போன்ற புதிய விதிகளால், இங்கிலாந்தின் வடக்கில் இருக்கும் லட்சக்கணக்கான மக்கள் குழப்பமடைந்து வருகின்றனர்.  இந்நிலையில் தான் போரிஸ் சில நாட்களுக்கு முன்பு ஐரோப்பாவில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படலாம் என்று எச்சரித்தார்.   

அதைத் தொடர்ந்து நாட்டின் ஒரு சில பகுதிகளில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருகிறது. இதனால் உள்ளூர் ஊரடங்கு விதிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதாக உறுதியான தகவல் கிடைக்கும் பட்சத்தில் லண்டன் மக்கள் ஊரடங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து தற்போது போரிஸ் ஜோன்சன், இங்கிலாந்தில் பரவி வரும் கொரோனா வைரஸால், இரண்டாவது அலை இருக்குமானால், இங்கிலாந்தின் புதிய ஊரடங்கு நடவடிக்கை குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து