முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 14 ஆகஸ்ட் 2020      உலகம்

லண்டன் : இங்கிலாந்தில் வணிக வளாகங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால், இதுவரை சுமார் 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தைக் கடந்து பதிவாகியுள்ளது.

இது அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  இருப்பினும் பொருளாதாரத்தை மீட்க வேண்டிய அவசியம் காரணமாக, பல்வேறு கட்டுப்படுகளுடன் இங்கிலாந்தில் வணிக ரீதியிலான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு, பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இங்கிலாந்தில் வணிக வளாகங்கள், கேசினோக்கள் ஆகியவற்றை மீண்டும் திறக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிகரித்து காணப்பட்ட கொரோனா தொற்று சற்று குறைந்து வருவதால் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து