எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் அம்மா (ஜெயலலிதா) நினைவிடம் விரைவில் திறக்கப்படும் என்று சுதந்திர தின விழாவில் முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.
சுதந்திரதின விழா :-
நாட்டின் 74-வது சுதந்திர தின விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய கொடி ஏற்றி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
“சுதந்திரத்தை பெற்று விடுவது கூட எளிது. அதை பாதுகாப்பது அதைவிடக் கடினம். பாதுகாப்பது கூட எளிது. சுதந்திரத்தால் ஏற்படும் பயன் எல்லோருக்கும் சேரச் செய்வது கடினம்” என்றார் பேரறிஞர் அண்ணா.
பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்,
புரட்சித் தலைவி அம்மா, அவர்களின் வழி வந்த எனது தலைமையிலான அம்மாவின் அரசு, அமைதி, வளம், வளர்ச்சி என்ற முப்பெரும் கோட்பாடுகளின் அடிப்படையில் சுதந்திரத்தின் பயனை அனைவரும் பெறும் வகையிலான பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் அளப்பறிய முன்னேற்றம் கண்டு, ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
இந்த ஆண்டு உலகத்தையே கொரோனா வைரஸ் தொற்று புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நோய் தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களை மீட்பதற்கு சரியான வழிமுறைகளை கடைபிடித்து, உங்களின் மக்கள் நல அரசு நேர்மையுடனும், உண்மையுடனும் செயல்பட்டு, பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.
குறிப்பாக, நாட்டிலேயே நாளொன்றுக்கு பரிசோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும், இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில்தான் அதிகம். இதனால், விலை மதிக்க முடியாத மனித உயிர்களை நாம் காப்பாற்றியுள்ளோம்.
எனவேதான் தமிழ்நாட்டில், நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், நோயினால் இறந்தவர்களின் சதவிகிதம் மிகவும் குறைவாகவும் உள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தியபோதும், அரசு விவசாய பணிகளுக்கும், சரக்கு போக்குவரத்திற்கும் அனுமதி அளித்து, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
• மக்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி பொது இடங்களில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி மற்றும் கைகளை முறையாக கழுவுதல் ஆகியவற்றை உறுதிபடுத்தி வருகிறோம்.
• நமது மாநிலத்தில் இருந்து 4 லட்சத்து 18 ஆயிரத்து 903 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பத்திரமாக அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். மேலும் 12.8.2020 வரை 64,661 வெளிநாடு வாழ் தமிழர்களை “வந்தே பாரத் மற்றும் சமுத்திர சேது இயக்கத்தின்” மூலம் பத்திரமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்துள்ளோம்.
• மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பஞ்சாயத்துகளில் வாழும் மக்களுக்காக இலவசமாக மறுமுறை உபயோகிக்க தகுந்த முகக் கவசங்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
• தற்போது மாநில அளவில் 1,29,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் இந்த எண்ணிக்கையை அதிகப் படுத்துவதற்கும் ஆக்சிஜன் உடன் கூடிய படுக்கைகள் எண்ணிக்கையை அதிகப் படுத்துவதற்கும் தனி கவனம் செலுத்தப்படுகிறது.
• மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த சுமார் 1800 மருத்துவர்கள் 7000 செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவசார் பணியாளர்கள் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
• நவீன உயிர்காக்கும் மருந்துகள் கொள்முதல் செய்து, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
• இதுவரை அம்மாவின் அரசு, மாநில அரசின் நிதி ஆதாரத்தை கொண்டு கோவிட் நோய் தொற்று தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக சுமார் 6,650 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
அரசின் சாதனைகள்:-
• பொது முடக்க காலத்தில், உணவு பாதுகாப்பினை உறுதி செய்ய, ஏழைகள், சிறு தொழில் செய்வோர், சிறு வணிகம் செய்வோர் போன்ற 2.01 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே, ஜுன், ஜுலை மாதங்களுக்கு அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு போன்ற ரேசன் பொருட்களை விலையில்லாமல் வழங்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். மேலும், அவர்களுக்கு 1,000 ரூபாய் ரொக்க நிவாரணம் வழங்கியதும் தமிழ்நாடு தான்.
• கட்டுமானத் தொழிலாளர்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள் உள்ளிட்ட 17 அமைப்பு சாரா தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், திரைப்படத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 14 நல வாரிய தொழிலாளர்கள், தீப்பெட்டி தொழிலாளர்கள் என மொத்தம் 35.65 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா 2000 ரூபாய் ரொக்க நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் 13.35 லட்சம் பேருக்கு தலா 1000 ரூபாய் ரொக்க நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
• கொரோனா ஊரடங்கு காலத்தில் வெளி மாநில தொழிலாளர்கள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோரின்
பசிப்பிணி போக்கும் அட்சய பாத்திரமாக அம்மா உணவகங்கள், சிறப்பு முகாம்கள், சமூக உணவுக் கூடங்கள் மூலம் தினமும் சுமார் 8 லட்சம் மக்களுக்கு சூடான, சுவையான, சுகாதாரமான உணவு விலையில்லாமல் வழங்கப்பட்டது.
• தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ், ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், வருமானத்தை பெருக்கவும் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறும் வகையில், கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
• பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், கொரோனா தொற்று நோய் சிகிச்சையும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான செலவினை அரசே ஏற்கும். இந்த சலுகை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய மருத்துவ கல்லூரிகள் :-
அதிக அளவில் தமிழ்நாட்டைச் சார்ந்த கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவை நனவாக்கும் விதமாக, குறுகிய காலத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, அரியலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, அவை அனைத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
அம்மாவின் அரசு ‘நீட் தேர்வை’ நடத்தக் கூடாது என்று கொள்கை அளவில் தொடர்ந்து எதிர்த்து வருகின்றது. கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வினால், தமிழ்நாட்டிலுள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர்வது மிகவும் குறைந்து விட்டது என்பதை தெளிவாக ஆராய்ந்து, அதனை நிவர்த்தி செய்யும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவர் ஆகும் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில் அவர்களுக்கு இந்த ஆண்டு முதல் மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு வழங்க அம்மாவின் அரசு முடிவு செய்து, அதையே வரலாற்று சிறப்பு மிக்க சட்டமாக பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அம்மாவும், அவரைத் தொடர்ந்து அம்மாவின் அரசும் டெல்டா விவசாயிகளின் உயிர் பிரச்சனையான காவேரி நதிநீர் பிரச்னைக்கு பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடத்தி காவேரி மேலாண்மை ஆணையம் அமைத்து, தொடர்ந்து அவ்வாணையத்தின் மூலமாக காவேரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டி வருகிறது.
மேட்டூர் அணை திறப்பு:-
இவ்வாண்டு டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி செய்வதற்காக, குறித்த நேரத்தில், அதாவது ஜுன் 12 ஆம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மேலும், மேட்டூர் அணையில் தண்ணீரை திறப்பதற்கு முன்னரே கடைமடை வரை தூர் வாரப்பட்டு, வழக்கத்திற்கு மாறாக 10 நாட்களுக்கு முன்னரே தண்ணீர் கடைமடை வந்தடைந்தது. இதனால், டெல்டா பகுதியிலுள்ள 4 லட்சத்து 11 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் தற்பொழுது குறுவை நெல் பயிர் சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளனர்.
வேளாண் மண்டலமாக அறிவிப்பு:-
டெல்டா விவசாய பெருமக்களின் கோரிக்கையினை உணர்வுபூர்வமாக உணர்ந்தும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பினை உறுதிபடுத்திடவும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, கடலூர், மாவட்டங்களில் உள்ள காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்து, குறுகிய காலத்திலேயே வரலாற்று சிறப்பு மிக்க சட்டம் இயற்றி, இப்பகுதிகளில் வேளாண்மைக்கு நேரடியாக பாதிப்பு தரும் எந்த தொழிற்சாலைகளும், திட்டங்களும் செயல்படுத்த முடியாது என்ற நிலையை அம்மாவின் அரசு உருவாக்கியுள்ளது என்பதனை விவசாயி என்ற முறையில் மிக்க பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேளாண் பெருமக்களுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும், மீனவ நண்பர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் என்ற இடத்தில் சுமார் 1,102 ஏக்கர் நிலப்பரப்பில், 1023 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலகத்தரம் வாய்ந்த நவீன கால்நடை பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இவ்வளாகத்தில் தமிழ்நாட்டில் ஐந்தாவது கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தேனி மாவட்டம், வீரபாண்டி மற்றும் தப்புகுண்டு வருவாய் கிராமங்களில், புதிதாக ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இந்த ஆண்டு அமைக்க ஆணை வெளியிடப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையிலும் புதிதாக ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இவ்வாண்டே துவக்கப்படும்.
கடந்த மூன்றாண்டுகளில், அம்மாவின் அரசு 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, நதிகள், ஓடைகள் ஆகியவற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும், இதுபோன்று, ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக 730.4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 31,834 சிறிய தடுப்பணைகளும் கட்டப்பட்டுள்ளன.
இணைப்புத்திட்டங்கள்:-
காவேரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்திக்கடவு-அவினாசி திட்டம், தாமிரபரணி-கருமேனி ஆறு, நம்பியாறு நதிகள் இணைப்புத் திட்டம் என பல்வேறு நீர்வள ஆதார திட்டங்களை, நிறைவேற்றி வரும் ஒரே அரசு, அம்மாவின் அரசு.
• இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள செயல் திறன் தரக் குறியீட்டின்படி பள்ளிகளில் வசதிகளை வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
கல்வி தொலைக்காட்சி:-
• கொரோனா பொது முடக்கத்தால், பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கூட, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பாடங்களை வீட்டிலிருந்தே தொடர்ந்து கற்றுக் கொள்ள கல்வி தொலைக்காட்சி மூலமாக, காணொலிப் பாடங்கள் ஒலிபரப்பப்படுகின்றன.
மேலும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டதுடன், அரசு வழங்கியுள்ள விலையில்லா மடிக்கணினிகளில் காணொலிப் பாடங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகியோருக்கான 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு எந்தவிதமான இடையூறும் வராமல் இருப்பதற்காக, இந்த ஒதுக்கீட்டினை அரசியலமைப்பு சட்டம் ஒன்பதாவது பிரிவின் கீழ் கொண்டு சேர்த்தது சமூகநீதி காத்த வீராங்கனை அம்மா அவர்கள்தான்.
பிற்படுத்தப்பட்டோர் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டிற்காக சமீபத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மறுசீரமைப்பு செய்து, தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, சீர்மரபினர் நல வாரியத்தின் தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு அவ்வாரியம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
அம்மா அவர்கள் எடுத்த முயற்சியினால், சென்னை உயர்நீதிமன்றத்தில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அகில இந்திய மருத்துவக் கல்வி ஒதுக்கீட்டில் சாதகமான தீர்ப்பினை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக விளங்கும் அம்மாவின் அரசு, அனைத்து மாவட்டங்களிலும், முஸ்லீம் மற்றும் கிருத்துவ மகளிர் உதவும் சங்கங்களை உருவாக்கியுள்ளது. ஜெருசலம் மற்றும் ஹஜ் புனிதப் பயணம் ஆகியவற்றை தொடர்ந்து அம்மாவின் அரசு ஊக்குவித்து வருகிறது.
தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கு வழங்கப்படும் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி இவ்வாண்டு முதல் 5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் வகையில் 2011ம் ஆண்டு முதல் இதுவரை அமைக்கப்பட்ட, 2 லட்சத்து 20 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, 67 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மங்காப்புகழ் கொண்டு, தனது ஆளுமையால் சரித்திரத்தில் இடம் பெற்ற அம்மா அவர்களின் இல்லத்தை, நினைவிடமாக மாற்ற நிலம் எடுப்புப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதனை நிருவகிக்கவும், பராமரிக்கவும், அறநிறுவனம் ஒன்று எனது தலைமையில் நிறுவ ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
மேலும், அம்மா அவர்களுக்கு மெரீனாவில் நினைவிடம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அது விரைவில் திறக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரு பவுன் 92,640-க்கும் விற்பனை
13 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
-
இளையராஜா இசையில் உருவாகும் மைலாஞ்சி
13 Oct 2025அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் படம் மைலாஞ்சி.
-
எங்கள் நிறுவனருக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி
13 Oct 2025கடந்த வருடம் இதேநாளில் (அக்.14-ல்) கோவில்பட்டி அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த தினபூமி நாளிதழ் நிறுவனரும், தொழிலதிபருமான திரு.கே.ஏ.எஸ்.மணிமாறன் அவர்களுக்கு தினபூமி நாளி
-
ஆய்வு செய்யாமல் உத்தரவிடுவதா..? கரூர் கூட்டநெரிசல் வழக்கில் ஐகோர்ட் நீதிபதிக்கு கண்டனம்
13 Oct 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்த விதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தீபாவளிக்கு வெளியாகும் பைசன்
13 Oct 2025அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன்.
-
தமிழகத்தில் 19-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு : இன்று 4 மாவட்டங்களில் கனமழை
13 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்.19-ம் தேதி வரை 6 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று கோவை, நீ
-
ரிசர்வ் வங்கியின் புதிய காசோலை முறைக்கு உடனடி தீர்வு முறை : செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
13 Oct 2025சென்னை : ரிசர்வ் வங்கிக்கு காசோலைகளையும் நேரத்துக்கு தீர்வு செய்ய வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார்.
-
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தமிழ்நாடு அரசாணை வெளியீடு
13 Oct 2025சென்னை, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
மருதம் திரை விமர்சனம்
13 Oct 2025ராணிப்பேட்டை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் விதார்த், மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விதா
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: வரும் 17-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும்
13 Oct 2025சென்னை, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்
-
கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்? ஆதவ் அர்ஜுனா
13 Oct 2025புதுடெல்லி : கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்? என்று ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
-
உ.பி.யில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
13 Oct 2025லக்னோ : உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளி போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்தனர்.
-
கரூர் சம்பவத்தில் நீதியை நிலைநாட்ட தொடர்ந்து பாடுபடுவோம்: ஆதவ் அர்ஜுனா
13 Oct 2025சென்னை : கரூர் சம்பவத்தில் எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் நீதியை நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபடுவோம் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
-
இந்தோனேஷிய பெண்ணை கரம்பிடித்த தமிழக வாலிபர்
13 Oct 2025திருவாரூர் : இந்தோனேஷிய பெண்ணை திருவாரூர் வாலிபர் கரம்பிடித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
-
கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு இடைக்காலம் தான்: வில்சன்
13 Oct 2025புதுடெல்லி : கரூர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கியது இடைக்கால தீர்ப்புதான் என்று வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார்.
-
வில் (உயில்) திரை விமர்சனம்
13 Oct 2025தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு ஒரு வீட்டை அலக்கியா பெயரில் எழுதி வைத்து விட்டு பின் இறந்து விடுகிறார்.
-
20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது: இஸ்ரேல் ராணுவம்
13 Oct 2025டெல் அவிவ், உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.
-
தேசிய தலைவர் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி
13 Oct 2025எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜெனிபெர் மார்கிரட் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘தேசிய தலைவர்.
-
சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள்; ரூ.190 கோடியில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள், ரூ.190 கோடி செலவில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்ற
-
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்
13 Oct 2025ராமேசுவரம் : இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவர மீனவர்கள் 3-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
-
ஹமாஸ் பிடித்து வைத்திருந்த 20 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிப்பு
13 Oct 2025காசா : ஹமாஸ் வசம் இருந்த அனைத்து பணயக்கைதிகளும் விடுவிப்பு செய்யப்பட்டனர்.
-
தென்ஆப்பிரிக்காவில் சோகம்: பேருந்து விபத்தில் 42 பேர் பலி
13 Oct 2025ஜோகன்னஸ்பர்க் : தென்ஆப்பிரிக்காவில் பேருந்து விபத்தில் 42 பேர் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
கரூர் துயர சம்பவம்: த.வெ.க. தலைமை அலுவலகத்தில் 16-ம் நாள் நினைவேந்தல் போஸ்டர்
13 Oct 2025சென்னை : கரூர் சம்பவம்; த.வெ.க. தலைமை அலுவலகம் வெளியே 16-ம் நாள் நினைவேந்தல் போஸ்டர் ஒட்டப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டது.
-
கரூர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது: அண்ணாமலை
13 Oct 2025சென்னை : கரூர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அண்ணாமலை கூறினார்.
-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 92 கோடி ரூபாய் மதிப்பில் புதிய, முடிவுற்ற பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.92 கோடி மதிப்பிலான 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.