முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்

வியாழக்கிழமை, 3 செப்டம்பர் 2020      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பதி ஏழுமலையான் கோவில் கணக்கு மற்றும் சொத்துக்களை தணிக்கை செய்வதற்கு தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துக்கள் மற்றும் நகைகள் அனைத்தையும் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும் என அர்ச்சகர் ரமண தீட்சிதர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமராவ் காலத்தில் இருந்து தற்போது வரை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்துக்கள், நகைகள் மற்றும் பணப்பரிமாற்றம் குறித்து தணிக்கை செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமிக்கு அவர் டுவீட் செய்திருந்தார்.  

இதனையடுத்து கடந்த 5 ஆண்டு கால திருப்பதி கோவில் கணக்கு மற்றும் எதிர்கால கணக்குகளை தலைமை கணக்கு தணிக்கையாளர் தணிக்கை செய்ய உத்தரவிடக்கோரி ஆந்திர ஐகோர்ட்டில் சுப்பிரமணியன் சுவாமி பொதுநல வழக்கு தொடர்ந்தார். கோவிலுக்கு சொந்தமான நகைகள், சொத்துக்கள் மற்றும் வரவு -செலவு கணக்கை அவர் கேட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஏராளமான மக்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.  

இதனைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டு கால திருப்பதி கோவில் கணக்குகள் மற்றும் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் நடந்த தேவஸ்தான வாரிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2014 முதல் 2020 வரையிலான கணக்குகளை சிறப்பு தணிக்கை செய்து 6 மாதங்களில் அறிக்கை வழங்கும்படி தலைமை கணக்கு தணிக்கையாளரை கேட்டுக் கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து