ஒன்றரை கோடி தொண்டர்களின் பாதுகாவலராக முதல்வர், துணை முதல்வர் திகழ்கிறார்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2020      தமிழகம்
RB-Udayakumar 2020 09 20

Source: provided

மதுரை : ஒன்னரை கோடி தொண்டர்களின் பாதுகாவலராக முதல்வர், துணை முதல்வர் திகழ்கிறார்கள் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். 

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது இதற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். 

இந்த நிகழ்ச்சிக்கு அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான ஆர் பி உதயகுமார் ஆலோசனை வழங்கினார்.  இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே,மாணிக்கம், எஸ்.எஸ். சரவணன் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் ஐயப்பன், திருப்பதி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், மாவட்ட இளைஞரணி செயலாளர் காசிமாயன் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியம்மாள், ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், பேரூர் கழக செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்ரமணி, மாவட்ட மகளிர் செயலாளர் லட்சுமி, மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் சரவணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கராஜ் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசியதாவது: 

ராமன், லட்சுமணனிடம் உள்ள புரிதல் போல முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருந்து தமிழகத்தில் அம்மாவின் வழியில் புனித ஆட்சியை நடத்தி வருகின்றனர் அது மட்டுமல்லாது இந்தியாவில் மூன்றாம் பெரிய இயக்கமாக இருக்கும் இந்த இயக்கத்தில் உள்ள ஒன்றரை கோடி கழகத் தொண்டர்களின் பாதுகாவலராக உள்ளனர். 

கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவை செய்தது அதிமுகதான் திமுக எந்த வேலையும் செய்யவில்லை. இந்தியாவிலேயே கபசுரகுடிநீர் வழங்கிய ஒரே மாநிலம் தமிழகம் தான். நமது மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் மட்டும் 5 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கபட்டுள்ளது. 

பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற தேர்தலில் கழகத்திற்கு மிகவும் நீங்கள் ஆற்றிய தொண்டு மகத்தானது எம்.ஜி.ஆரும் சரி, அம்மாவும்சரி, தற்போது முதல்வரும், துணை முதல்வரும் ஆகியோரும் உங்கள் மீது மிகவும் பாசம் வைத்துள்ளனர்.  1987 ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் நலனை கருதி 2 லட்ச ரூபாய் சேமநல நிதியாக புரட்சித்தலைவர் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இதை 2012ஆண்டு 5 லட்சத்து 25 ஆயிரமாக சேமநலநிதியைஅம்மா உயர்த்தி தந்தார் தற்பொழுது நமது முதலமைச்சர் 3.1.2018யில் 7 லட்சமாக உயர்த்தி தந்துள்ளார்இதற்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் உள்ளார் இந்தியாவில் வழக்கறிஞர்களுக்கு சேம நல நிதியாக ஏழு லட்ச ரூபாய் வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான். 

அதுமட்டுமல்லாது சட்டக்கல்லூரியில் கல்வியை முடித்த இளம் வழக்கறிஞர்கள் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் மூத்த வழக்கறிஞரிடம் பயிற்சி மேற்கொள்வர் இதில் குறிப்பாக கிராமபுற ஏழை மாணவர்களின் நலத்தைக் கருத்தில் கொண்டு இளம் வழக்கறிஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு 3,000 ரூபாய் உதவித் தொகையை வழங்க முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

இப்படி பல்வேறு திட்டங்களை செய்துவரும் முதலமைச்சர் சாதனை திட்டங்களை உங்களின் சக வழக்கறிஞர்கள் இடத்தில் எடுத்துக் கூறுங்கள் அதுமட்டுமல்லாது வருகின்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் பல்வேறு தில்லுமுல்லு செய்வார்கள் அதை நீங்கள் கண்காணித்து அதை தவிடுபொடியாக்கி கழகத்தின் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்று அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து