எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (20.10.2020) சென்னை, மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு காவல்துறையில் பணியின் போதும், கொரோனா தொற்றினாலும் உயிர்த்தியாகம் செய்த வீரக் காவலர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள வீரக்காவலர் நினைவுரு கற்கள் மற்றும் நீருற்றினை திறந்து வைத்தார். மேலும், மரக்கன்றினை நட்டு, காவல்துறை தலைமையகத்தை பார்வையிட்டார்.
காவல் பணியில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து வீரமரணமடைந்த காவல் ஆளினர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் நாள் நாடு முழுவதும் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. 1959-ம் ஆண்டு, அக்டோபர் 21-ம் நாளன்று லடாக் பகுதியில், கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரத்தில் உள்ள Hot Springs என்ற இடத்தில் சீன இராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை இக்காவலர் நினைவுச் சின்னத்தின் பீடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறுகிறோம்.
சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும், தேச விரோதிகள் மற்றும் கொடுங் குற்றவாளிகளை கைது செய்ய முயலும் போதும், பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கின்ற பணிகளின் போதும் 1950-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 151 காவல் ஆளினர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். இந்த ஆண்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் போது, முன்களப் பணியில் ஈடுபட்ட 29 காவல் ஆளினர்கள் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகியும், 3 காவல் துறையினர் தங்களது கடமைகளைச் செய்யும் போதும் வீர மரணமடைந்துள்ளனர்.
இங்ஙனம் பணியின் போது தங்கள் இன்னுயிரைத் நீத்த 151 தமிழ்நாடு காவல்துறை வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் நினைவுருவக் கற்களில் அவர்களின் திருவுருவம் மற்றும் உயிர்நீத்த விவரங்கள் காவலர் நினைவுச் சின்னத்தின் பீடத்தைச் சுற்றி பதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் நேற்று தமிழ்நாடு காவல்துறையில் பணியின் போதும், கொரோனா தொற்றினாலும் உயிர்த்தியாகம் செய்த வீரக் காவலர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள வீரக்காவலர் நினைவுரு கற்கள் மற்றும் நீருற்றினை திறந்து வைத்தார்.
அம்மா 21.2.2014 அன்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் ஆலமரக்கன்றினை நட்டு, தமிழகம் முழுவதும் 66 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை துவக்கி வைத்தார். அந்த வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றினை நட்டு, காவல்துறை தலைமையகத்தை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் பெருமக்கள், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ராஜேஷ் தாஸ் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் உற்பத்தி வளர்ச்சி மூன்று மடங்கு அதிகம்: முதல்வர்
12 Feb 2026சென்னை, இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழ்நாட்டின உற்பத்தி வளர்ச்சி 3 மடங்கு அதிகம் என்றும், . 5 ஆண்டுகளில் 12.37 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
-
ரூ. 31,934 கோடி முதலீட்டில் முடிவுற்ற 52 திட்டப்பணிகள்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Feb 2026சென்னை, தமிழகத்தில் புதிதாக 82,664 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் ரூ.31,934 கோடி முதலீட்டில்
-
சென்னையில் ரூ.96.04 கோடியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
12 Feb 2026சென்னை, சென்னையில் ரூ.96.04 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
12 Feb 2026மானாமதுரை,இந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் ரூ.22 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
-
தங்கம் விலை குறைவு
12 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,520 குறைந்து ரூ. 1,16,800-க்கு விற்பனையானது.
-
2 நாட்கள் பயணமாக அமித்ஷா இன்று திருச்சி வருகை
12 Feb 2026சென்னை, தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இன்று (பிப்.13) திருச்சிக்கு வருகிறாா்.
-
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் மார்ச் 9-ம் தேதி விவாதம்
12 Feb 2026புதுடெல்லி, மக்களவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மக்களவை வட்டாரங்கள் தெரிவித்தன.
-
நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: தமிழ்நாட்டில் பெரியளவில் பாதிப்பில்லை
12 Feb 2026சென்னை, மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நேற்று காலை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றன.
-
ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப், டெலிகிராம் திடீர் நீக்கம் 10 கோடி மக்கள் அவதி
12 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவில் வாட்ஸ்-ஆப் நீக்கக்கப்பட்டதால் 10 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
-
மகாசிவராத்திரி, வார இறுதி நாட்கள்: தமிழ்நாடு முழுவதும் 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
12 Feb 2026சென்னை, மகாசிவராத்திரி (பிப்.15) மற்றும் வார இறுதி தினங்களை முன்னிட்டு 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ள
-
பிரான்சிடம் ரூ.3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
12 Feb 2026புதுடெல்லி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 114 ரஃபேல் விமானங்களை வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்


