முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் நிதிஷ்குமாரின் ஹெலிகாப்டர் மீது செருப்பு வீச்சு: பீகாரில் பரபரப்பு

செவ்வாய்க்கிழமை, 27 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பாட்னா : பீகாரில் அம்மாநில முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் மீது செருப்பு வீசிய சம்பவத்தில் 3 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

பீகார் சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு நேற்று முன்தினம் முசாபர்பூரில் நடந்த பேரணியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது, அப்பகுதியில் இருந்து ஒருவர் திடீரென ஹெலிகாப்டர் நோக்கி தனது செருப்பை வீசினார். 

மேலும், நிதிஷ்குமாருக்கு எதிராக ஏராளமான இளைஞர்கள் கோஷங்களை எழுப்பினர். அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு போலீசார், நிதிஷ்குமாரை மாற்று வழியாக அழைத்து சென்றனர்.

இவ்விவகாரம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முதல்வரின் ஹெலிகாப்டர் மீது செருப்பு வீசிய சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து