ஆல்-ரவுண்டர் இல்லாததால் பாதிப்பு: கோலி பேட்டி

சனிக்கிழமை, 28 நவம்பர் 2020      விளையாட்டு
Vratkoli 2020-11-28

Source: provided

சிட்னி : சிட்னி ஒரு நாள் போட்டி தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘ஒவ்வொரு வீரரும் 50 ஓவர்களும் முழு உத்வேகத்துடன் விளையாட வேண்டியது அவசியமாகும். பீல்டிங்கின் போது 25 ஓவர்களுக்கு பிறகு எங்களது உடல்மொழி அசைவுகள் நன்றாக இல்லை. இது மிகுந்த ஏமாற்றம் அளித்தது.

ஒரு நாள் போட்டி விளையாடி நீண்டநாட்கள் ஆகிவிட்டதால் உள்ள பாதிப்பாக கூட இருக்கலாம். உலகத் தரம் வாய்ந்த அணிக்கு எதிராக விளையாடும் போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். அது தான் இன்றைய ஆட்டத்தில் நடந்தது. 

சில ஓவர்களை பகுதி நேர பவுலர்கள் வீசுவதற்குரிய வழிமுறையை நாங்கள் கண்டறிய வேண்டும். துரதிர்ஷ்டவசமாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இன்னும் பந்து வீசுவதற்கு தயாராகவில்லை. அவரை போன்ற தரமான ஆல்-ரவுண்டர்கள் இப்போதைக்கு நம்மிடம் இல்லை.

இது தான் அணியின் சரியான கலவைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆஸ்திரேலிய அணியில் ஆல்-ரவுண்டர்கள் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல் போன்றோர் சில ஓவர்கள் பந்து வீசுவது அவர்களுக்கு உதவுகிறது’ என்றார். 

90 ரன்கள் குவித்த இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில், ‘பந்து வீசுவதற்கு என்னை தயார்படுத்தி வருகிறேன். அதற்குரிய சரியான நேரம் வரும் போது பவுலிங் செய்வேன். சர்வதேச தரத்துக்கு வேகமாக பந்து வீச விரும்புகிறேன்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து