முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாஸ்டர் திரைப்பட விமர்சனம்

வெள்ளிக்கிழமை, 15 ஜனவரி 2021      சினிமா
Image Unavailable

Source: provided

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியாகி இருக்கும் படம் மாஸ்டர். சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருக்கும் மாணவர்களை தன்னுடைய ஆதாயத்துக்காக தவறான முறையில் பயன்படுத்தும் விஜய் சேதுபதியை ஒரு கல்லூரி பேராசிரியரான விஜய் தட்டி கேட்பது தான் மாஸ்டர் படத்தின் மையக்கரு.

இதை மூன்று மணிநேர சினிமாவாக மாற்றியதில் லோகேஷ் கனகராஜ் பல இடங்களில் ஜொலித்திருக்கிறார். கதைப்படி விஜய் ஹீரோவாக இருந்தாலும் படத்தின் நிஜ ஹீரோவாக படத்தையே தாங்கி நிற்கும் ஒரு கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

முதல் பாதியில் குடிக்கு அடிமையான பேராசிரியராகவும் இரண்டாம் பாதியில் சீர்த்திருத்த பள்ளி ஆசிரியராகவும் விஜய்க்கு இப்படத்தில் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

படத்துக்கு படம் ஏதோவொரு அரசியலை முன்னிறுத்தி பேசும் விஜய்இ இந்த படத்தில் அரசியல் குறித்த விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் இருப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பேசியுள்ளார்.

மற்றபடி ஹீரோயின் உட்பட டஜன் கணக்கில் நடிகர்கள் இருந்தும் யாருடைய கதாபாத்திரமும் வலுவாக அமையவில்லை. படத்தின் இன்னொரு பலம் அனிருத்தின் பின்னணி இசை. மொத்தத்தில் மாஸ்டர் - அசத்தலான படம் என்று கூற முடியாவிட்டாலும் ஒரு ஆறுதலான படம் என்று கூறலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து