முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாயில், 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம்

சனிக்கிழமை, 16 ஜனவரி 2021      உலகம்
Image Unavailable

துபாய் சுகாதார ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

துபாய் நகரில் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது பல்வேறு மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை ஏற்கனவே போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 21 நாட்கள் நிறைவடைந்திருந்தால் அவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. எனினும் இந்த 2-வது டோஸ் தடுப்பூசி போட வருபவர்கள் முறையாக பதிவு செய்து தங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வர வேண்டும்.

முதல் டோஸ் தடுப்பூசியானது துபாய் நகரில் வசித்து வரும் மருத்துவ பணியாளர்களுக்கும், முக்கிய பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், நாள்பட்ட வியாதியுடையோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

துபாய் நகரில் அல் சபா, ஜபில், அல் மிசர், நாத் அல் ஹமர், அல் பர்சா மற்றும் அப்டவுண் மிர்திப் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார மையங்களிலும், ஹத்தா ஆஸ்பத்திரியிலும் இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை போட வருபவர்கள் துபாய் சுகாதார ஆணையத்தின் இணையதளத்தில் முன்பதிவு செய்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து