முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடியூரப்பாவை தவிர்த்து கர்நாடக முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா ரகசிய ஆலோசனை

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகம் வந்தார். பாரதிய ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் எடியூரப்பா கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன் பிறகு பா.ஜனதா முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா சுமார் 2 மணி நேரம் ரகசிய ஆலோசனை நடத்தியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

இதில் மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங், தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் நீட்டிக்க அனுமதிப்பது குறித்தும், ஆட்சி நிர்வாகத்தில் எடியூரப்பா குடும்ப உறுப்பினர்களின் தலையீட்டை தடுப்பது குறித்தும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. முதல்-மந்திரி எடியூரப்பாவை தவிர்த்து இந்த கூட்டம் நடைபெற்றது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து