முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதியை சேர்ந்த 76 பேருக்கு அமெரிக்கா விசா கட்டுப்பாடுகள்

சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2021      உலகம்
Image Unavailable

சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் சவுதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கட்டுரைகளை எழுதி வந்தார். 

கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியாவின் தூதரகத்துக்கு சென்ற ஜமால் படுகொலை செய்யப்பட்டார். சவுதி அரேபியா அரசு தான் இந்த கொலையைத் திட்டமிட்டு நிகழ்த்தியதாக துருக்கி திட்டவட்டமாகக் கூறியதுடன் இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது. உலக அளவில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ள அதிருப்தியாளர்களை அச்சுறுத்துவதாக கூறி சவுதி அரேபியாவை சேர்ந்த 76 தனிநபர்களுக்கு எதிராக அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளின்கென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், எதிர்க்கருத்துக்கள் உடையவர்கள், ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களை அச்சுறுத்துதல் போன்றவை கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். இதுபோன்ற செயல்கள் அமெரிக்காவால் சகித்துக் கொள்ளப்பட மாட்டாது என ஜோ பைடன் உறுதிபட தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து