முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி தொடங்கும்: தேர்வுத்துறை தகவல்

வியாழக்கிழமை, 4 மார்ச் 2021      தமிழகம்
Image Unavailable

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி மே மாதம் 3-ம் தேதி தொடங்கும் என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. தொடர்ந்து நோய்த்தொற்றின் தாக்கம் குறையாததால் பள்ளிகளில் நேரடி வகுப்புகளாக இல்லாமல், ஆன்லைன், கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.  அதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் 19-ம் தேதி, பொதுத்தேர்வை எழுத இருக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு வகுப்புகள் தொடங்கின. 

பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு அதற்கான அறிவிப்புகளை கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும்? என்பதெல்லாம் மாணவ, மாணவிகளின் எண்ண ஓட்டத்தில் ஓடிக்கொண்டு இருந்த நிலையில், கடந்த 17-ம் தேதி அரசு தேர்வுத்துறை சார்பில் பிளஸ்-2 பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற மே மாதம் 3-ம் தேதி (திங்கட்கிழமை) தொடங்க இருக்கிறது. அவ்வாறு தொடங்குகிற இந்த தேர்வு அதே மாதம் 21-ம் தேதியுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறுகிறது. இதனால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி மே 3-ம் தேதி தொடங்குமாக என கேள்விகள் எழுந்து வந்தன.  இந்நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி மே 3-ம் தேதி தொடங்கும் என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு  தேர்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  இது குறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

வாக்கு எண்ணிக்கை பணியில் ஆசிரியர்கள் பங்கு பெரிய அளவில் இல்லை. இதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களிலும் பிரச்சினை இல்லை. கல்லூரிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் தேர்வு மையங்களுக்கு பாதிப்பு இல்லை என்பதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி மே 3-ம் தேதி தொடங்கும் என அந்த  அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து