முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி.யில் முகக்கவசம் அணியாமல் சென்ற 258 பேர் தற்காலிக சிறையில் அடைப்பு

வியாழக்கிழமை, 8 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

மத்தியப்பிரதேசத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சென்ற 258 பேர் தற்காலிகமாக சிறைவைக்கப்பட்டனர். 

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸின் 2-ம் அலை வேகமெடுத்துள்ளது. பொதுவெளியில் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலேயே பலரும் சுற்றித் திரிகின்றனர். இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் முகக்கவசம் அணியாமல் பொதுவெளியில் சென்ற 258 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப்பிரதேசத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் முழு ஊரடங்கும், சில பகுதிகளில் வாரம் இறுதி நாட்களில் முழு ஊரடங்கும், மற்ற இடங்களில் இரவு நேர ஊரடங்கும் அமலில் உள்ளது. பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று அம்மாநில அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சென்ற 258 பேரை பிடித்த போலீசார் அவர்களை தற்காலிகமாக சிறையில் அடைத்தனர். அவர்கள் அனைவரும் 3 மணி நேரத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். முகக்கவசம் அணியாதவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக மத்தியப்பிரதேசத்தில் முகக்கவசம் சரியாக அணியவில்லை என கூறி இளைஞர் ஒருவரை பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் போலீசார் கடுமையாக தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலானது. போலீசாரின் இத்தகைய நடவடிக்கைக்கு பொதுமக்களும், பத்திரிகை ஊடகங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து