முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுமித்ரா மகாஜன் உயிரோடு இருக்கும் போதே இரங்கல் வெளியிட்ட சசிதரூர்

வெள்ளிக்கிழமை, 23 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

மக்களவை முன்னாள் தலைவர் சுமித்ரா மகாஜன் காலமாகி விட்டார் என்ற வதந்தியை நம்பி, காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்  தனது டுவிட்டரில் இரங்கல் செய்தி பதிவிட்டார். ஆனால், சுமித்ரா மகாஜன் நலமுடன் இருப்பதாக பா.ஜ.க. தலைவர்கள் கூறியதைத் தொடர்ந்து சசி தரூர் தனது டுவீட்டை நீக்கினார்.

மக்களவை முன்னாள் தலைவராக 2014 முதல் 2019-ம் ஆண்டு வரை இருந்தவர் சுமித்ரா மகாஜன். இவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்து விட்டார் என்ற செய்தி சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. பலரும் டுவிட்டரிலும், பேஸ்புக்கிலும் இரங்கல் தெரிவிக்கத் தொடங்கினர்.  இதனை உண்மை என்று நம்பி, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் சுமித்ரா மகாஜன் மறைவுக்கு இரங்கல் பதிவு வெளியிட்டார். 

சசி தரூரின் டுவீட்டைப் பார்த்த பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா, தனது டுவிட்டரில், சுமித்ரா மகாஜன் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார். கடவுள் அவரை நீண்ட ஆயுளுடன் வாழ ஆசிர்வதிப்பாராக என்று  பதிவு செய்தார்.

இதையடுத்து சசி தரூர் டுவீட்டில் கைலாஷ் விஜய் வர்க்கியாவுக்கு நன்றி தெரிவித்தார். அதில், நன்றிகள் கைலாஷ் விஜய வர்க்கியா. நான் என்னுடைய டுவீட்டை டெலீட் செய்து விட்டேன். இதுபோன்ற தீய செய்திகளைக் கண்டுபிடித்துப் பரப்புவதற்கு மக்களைத் தூண்டுவது எது என்று எனக்கு வியப்பாக இருக்கிறது. சுமித்ரா ஜியின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட வாழ்வுக்கு எனது வாழ்த்துகள் எனத் தெரிவித்தார்.

அதன்பின் மற்றொரு டுவீட்டில் சசி தரூர், நான் இப்போது நிம்மதியாக இருக்கறேன். நான் நம்பகமான இடத்திலிருந்துதான் இந்தத் தகவலைப் பெற்றேன். நான் பதிவிட்ட செய்தியைத் திரும்பப் பெறுவதில் மகிழ்ச்சிதான். இருந்தாலும் இதுபோன்ற செய்திகளை யார் பதிவிடுவார்கள் என்பது வியப்பாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சுமித்ரா மகாஜன் மகன் மந்தர் டுவிட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், என்னுடைய தாயார் சுமித்ரா மகாஜன் நலமுடன் உள்ளார். அவர் பற்றி பரப்பி விடப்படும் தவறான செய்தியை யாரும் நம்பவேண்டாம். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் வந்துள்ளது. அவர் நலமுடன் உள்ளார் எனத் தெரிவித்தார்.

சுமித்ரா மகாஜன் லேசான காய்ச்சலுடன் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில் நெகட்டிவ் வந்தது. ஆனால், அதற்குள் சுமித்ரா மகாஜன் கொரோனா தொற்றில் உயிரிழந்து விட்டதாக யாரோ வதந்தியை பரப்பியுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து