முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவல் உச்சத்தில் இருப்பதால் இந்திய விமானங்களுக்கு கனடாவும் தடை

வெள்ளிக்கிழமை, 23 ஏப்ரல் 2021      உலகம்
Image Unavailable

கொரோனா பரவல் உச்சத்தில் இருப்பதால் இந்திய விமானங்களுக்கு கனடாவும் தடைவிதித்துள்ளது.

கொரோனா பரவல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி மிக கடுமையான பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்பவர்கள் 2 டோஸ் தடுப்பு மருந்து போட்ட பிறகு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. பிரான்ஸ் நாடும் இந்தியாவில் இருந்து வருபவர்கள் தங்களை குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு அந்த நாட்டு அரசு 30 நாட்கள் தடை விதித்து இருக்கிறது.

இந்தியா, பாகிஸ்தானில் இருந்து கனடா வரும் பயணிகளுக்கு தொற்று பாதிப்பு இருப்பது அதிகரித்து இருக்கிறது. எனவே இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் விமானத்துக்கும் பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்களுக்கும் கனடா போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்துள்ளது.

அனைத்து வணிக தனி விமானங்களுக்கும் இந்த 30 நாள் தடை பொருந்தும். என்றாலும் சரக்கு விமானங்களுக்கு தடை இல்லை என்று கனடா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கனடா போக்குவரத்து துறை மந்திரி ஓமர் அல்காப்ரா கூறியதாவது:-

இந்தியாவில் இருந்து கனடா வரும் விமான பயணிகளுக்கு அதிகளவில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பாகிஸ்தானில் இருந்து வருவோருக்கும் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது. எனவே இந்த நாடுகளில் இருந்து கனடாவுக்கு பயணிகள் விமானம் வர 30 நாட்கள் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து