முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரையின் இளைய சகோதரர் மறைவு: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் மு. தம்பிதுரையின் இளைய சகோதரர் மு. ராஜா உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் மு. தம்பிதுரையின் இளைய சகோதரர் மு. ராஜா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

பாசமிகு சகோதரரை இழந்து வாடும் அன்பு சகோதரர் தம்பிதுரைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன் ராஜாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து