முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவையில்லாமல் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைத்தால் நடவடிக்கை பாயும் : புதுவை கவர்னர் தமிழிசை எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி : தேவையில்லாமல் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரை செய்பவர்கள் மீது மருத்துவத்துறையின் மூலம் கண்காணிப்பும், நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என்று புதுவை கவர்னர் தமிழிசை எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படாது.  ஆபத்தான சூழ்நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுகிறது.

ரெம்டெசிவிர் மருந்துக்காக எல்லா மக்களையும் அலைக்கழிக்க வேண்டாம்.  அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் அறிவுரையை ஏற்று செயல்பட வேண்டும். இது மருத்துவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆலோசனை. 

புதுச்சேரியில் யாரும் ரெம்டெசிவிர் மருந்துக்காக அலைய தேவையில்லை. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கும் அரசாங்கம் மூலமாக மருத்து வழங்கப்படுகிறது.

தேவையில்லாமல் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரை செய்பவர்கள் மீது மருத்துவத்துறையின் மூலம் கண்காணிப்பும், நடவடிக்கைகள் எடுக்க நேரிடும்.கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்ற மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை மருத்துவமனையின் மூலமே ஏற்பாடு செய்து சிகிச்சை அளிக்க வேண்டும். 

சிகிச்சை பெற வருபவர்களிடம் மருந்தை வாங்கி வரச்சொல்லி அலைக்கழிக்க கூடாது. மேலும் அரசாங்கம் மூலமாக வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து முறையான நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறதா, பயன்படுத்தப்படுகிறதா என்பது மருத்துவ தணிக்கை குழு மூலம் கண்காணிக்கப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து