எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : ரேசன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டம் நாளை 10-ம் தேதி தொடங்கப்பட உள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார்.
இதையடுத்து வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் கையெழுத்திட்டார்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ரேசன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார்.
நாளை 10-ம் தேதி முதல் டோக்கன் தரப்பட்டு தினமும் 200 பேருக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்றும், வீடு வீடாக ரேசன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
மேலும் டோக்கன் முறையாக தரப்படுகிறதா என கண்காணிக்க துணை தாசில்தார் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும் சக்கரபாணி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |