முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டி: அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை.!

திங்கட்கிழமை, 29 டிசம்பர் 2025      விளையாட்டு
Smriti-Mandhana-2025-12-29

திருவனந்தபுரம், சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஸ்மிருதி மந்தனா. மேலும் 10,000 ரன்களைக் கடந்த 2-வது இந்திய வீராங்கனை ஆனார். 

தொடரை வென்றது....

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

புதிய மைல்கல்...

அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினர். இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா 80 ரன்னும், ஷபாலி வர்மா 79 ரன்னும் எடுத்தனர். ரிச்சா கோஷ் 40 ரன்கள் எடுத்தார். இந்நிலையில், இந்தப் போட்டியில் 80 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

2 வது வீராங்கனை...

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் ஸ்மிருதி மந்தனா. மேலும் 10,000 ரன்களைக் கடந்த 2-வது இந்திய வீராங்கனை ஆனார். இந்தப் பட்டியலில் மிதாலி ராஜ் 10868 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக 10,000 ரன்களைக் கடந்த 4வது வீராங்கனை ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து