முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மம்தா மந்திரிசபையில் 43 அமைச்சர்கள் பதவியேற்பு: பதவி பிரமாணம் செய்து வைத்தார் கவர்னர்

திங்கட்கிழமை, 10 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ள நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் 43 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

கவர்னர் மாளிகையில் எளிமையாக நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் அனைத்து அமைச்சர்களும் பதவி ஏற்றனர். சில மூத்த அமைச்சர்கள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேரடியாக வராமல் காணொலி மூலம் பதவி ஏற்றனர்.  

292 தொகுதிகளுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்று 3-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது. நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தாலும், முதல்வராக கடந்த 5-ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். 

இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் 19 இணையமைச்சர்கள் உள்பட 43 அமைச்சர்கள் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். கவர்னர்  மாளிகையில் எளிமையாக நடந்த நிகழச்சியில் அமைச்சர்களுக்கு கவர்னர் தனகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  முன்னாள் நிதி அமைச்சர் அமித் மித்ரா, பிரத்யா பாசு, ரதின் கோஷ் ஆகியோர் காணொலி மூலம் பதவி ஏற்றுக் கொண்டனர்.

மேலும், மூத்த அமைச்சர்கள் சுப்ரதா முகர்ஜி, பர்தா சாட்டர்ஜி, பிர்ஹத் ஹக்கிம், ஜோதி பிரியா மாலிக், மோலோய் காடக், அரூப் பிஸ்வாஸ், மருத்துவர் சசி பான்ஜா, ஜாவித் அகமது கான் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து