முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றி சுற்றி வரும் பறக்கும் தட்டுகள் : அமெரிக்காவில் மக்கள் பீதி

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூன் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவை மிரட்டி வரும் பறக்கும் தட்டுகள் குறித்து வரும் 25-ம் தேதி பென்டகன் அறிக்கை வெளியிட உள்ள நிலையில், ‘பறக்கும் தட்டுகள் அமெரிக்காவை மட்டும் குறிவைத்து சுற்றி சுற்றி வருவது ஏன்? இது தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது,’ என மூத்த எம்பி.க்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

வேற்றுகிரக வாசிகளான ஏலியன்களின் வாகனமாக கருதப்படும் பறக்கும் தட்டுகள் பற்றி காலம் காலமாக பல செய்திகள் கூறப்படுகிறது. அவை எதுவும் ஆதாரப்பூர்வமாக இருப்பதில்லை. ஆனாலும், ஏலியன்கள் இருக்கின்றன, 

பறக்கும் தட்டும் இருக்கிறது என அமெரிக்கா மட்டும் எப்போதும் பீதியை கிளப்பிக் கொண்டேதான் இருக்கிறது. சமீபத்தில், அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன், பறக்கும் தட்டு குறித்த வீடியோ ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதுவரை எந்த நாடும் இதுபோன்ற ஒரு மர்ம பறக்கும் பொருள் குறித்த வீடியோக்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதில்லை. இந்த வீடியோவில் பறக்கும் தட்டு போன்ற ஒரு பொருள் கருப்பு நிறத்தில் வானில் செல்கிறது. முதலில் மெதுவாக செல்லும் அந்த தட்டு சில நிமிடங்களில் வேகமெடுத்து மறைந்து விடுகிறது.

முதல்முறையாக கடந்த 2004-ல் சான்டீகோவில் அமெரிக்காவின் எப்-18 போர் விமானத்தில் இருந்து பறக்கும் தட்டின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. 

கடந்த ஏப்ரலில் இதே சான்டீகோ பகுதியில் கடற்படை போர்க்கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் முக்கோண வடிவத்தில் ஒரு பறக்கும் தட்டு மின்னல் வேகத்தில் செல்வது சிக்கியுள்ளது.

அதோடு, அமெரிக்காவில் சமீபத்தில் மர்ம உலோக தூண் பல இடங்களில் தோன்றி பீதி கிளப்பியது.

அமெரிக்காவில் இவை பீதியை கிளப்பியுள்ளது. ஆண்டாண்டு காலமாக பென்டகன் பறக்கும் தட்டு பற்றி ஆய்வு செய்து வருகிறது. அதில் கண்டறியப்பட்ட பல அதிர்ச்சிகரமான தகவல்களை வரும் 25-ம் தேதி அது வெளியிடுகிறது.

இந்நிலையில், பென்டகனின் ஆய்வறிக்கையில் உள்ள தகவல்களை அறிந்த சில மூத்த எம்பிக்கள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து