முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு தடுப்பூசி

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

விஜயவாடா : ஆந்திர பிரதேசத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் தாய்மார்களில் 5.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

நாட்டில் கொரோனாவின் 2-வது அலையில் சிக்கி மக்கள் அவதியுற்ற சூழலில், 3-வது அலை பாதிப்பு ஏற்பட கூடிய சாத்தியமுள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இதனால், பொதுமக்கள் கொரோனா விதிகளை முறையாக பின்பற்ற கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று நாட்டில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.  இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  இதுபற்றி பொது சுகாதாரம் மற்றும் குடும்பநல இயக்குனரான மருத்துவர் கீதா பிரசாதினி கூறும் போது, 

இந்தியாவில் கொரோனா 3-வது அலை பாதிப்பு ஏற்பட கூடிய சாத்தியம் உள்ளது.  அதனை முன்னிட்டு தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டுள்ளோம்.  நேற்று முன்தினம் வரை 5.5 லட்சம் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.  இதுதவிர, மீதமுள்ள 4.5 முதல் 5 லட்சம் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம் என கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து