முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. மகளிர் பேட்டிங் தரவரிசை: 9-வது முறையாக மீண்டும் முதலிடம் பிடித்த மிதாலி !

செவ்வாய்க்கிழமை, 20 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: ஐ.சி.சி மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் 16 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தரவரிசை வெளியீடு...

சமீபத்திய வாராந்திர தரவரிசை பட்டியல் வெளியீட்டில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய 2 அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் கடைசி 3 ஆட்டங்கள் கணக்கில் கொள்ளப்பட்டு தரவரிசை புதுப்பிக்கப்பட்டு உள்ளது.

ஸ்டெபானி சறுக்கல்...

இதில் பெரிய ஸ்கோரை குவிக்காத வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஸ்டெபானி டெய்லர் (49 மற்றும் 21 ரன்கள்), 30 புள்ளிகளை இழந்து முதலிடத்தில் இருந்து இறங்கியுள்ளார். இதனால், 762 புள்ளிகளை கொண்ட மிதாலி ராஜ்  முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.  அவர் பேட்டிங் தரவரிசையில் முதன்முதலாக 16 ஆண்டுகளுக்கு முன்பு முதலிடம் பிடித்தார். 

9-வது முறையாக...

இவர் முதலிடம் பிடிப்பது தற்போது 9-வது முறையாகும். மிதாலி ராஜ் தவிர்த்து இந்திய அணியிலிருந்து ஸ்மிருதி மந்தானா மட்டுமே முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ள வீராங்கனை. 701 புள்ளிகளுடன் அவர் 9-வது இடத்தில் இருக்கிறார்.

3-வது இடத்தில் டெஸ்லர்...

வெஸ்ட் இண்டீசின் டெய்லர், கணக்கில் கொள்ளப்பட்ட 3 போட்டிகளில் விக்கெட் எதுவும் கைப்பற்றாத நிலையில், பந்து வீச்சாளர்கள் தரவரிசையிலும் முதல் இடத்தில் இருந்து 3 இடங்கள் இறங்கியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து