முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள்: ஆஸி. அணியின் கேப்டனாக ' அலெக்ஸ் கேரி ' நியமனம்

செவ்வாய்க்கிழமை, 20 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சிட்னி: மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக அலெக்ஸ் கேரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தொடரை வென்றது...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி-20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி-20 தொடரில், 4-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியது. 

முழங்காலில்...

இதனை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் மற்றும் டி-20 கேப்டனாக உள்ள ஆரோன் பிஞ்ச், முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இன்று நடைபெறும் போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கேப்டன்...

ஆரோன் பிஞ்ச் காயம் காரணமாக விலகியதால், முதலாவது ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக அலெக்ஸ் கேரி நியமிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அலெக்ஸ் கேரி, ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனாக பொறுப்பில் இருந்தார். தற்போது ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கேப்டனான பதவியேற்கும் 26வது நபர் என்ற பெருமையை அலெக்ஸ் கேரி பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து