முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. எந்த நிலைக்கும் செல்லும்: குமாரசாமி

புதன்கிழமை, 21 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு: ஆட்சியை பிடிக்க பாஜக எந்த நிலைக்கும் செல்லும் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார். 

இது குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:- 

பெகாசஸ் உளவு விவகாரத்தில் மத்திய அரசு சிக்கியுள்ளது. இது மனித உரிமை மீறல் என்ற போதிலும் மத்திய அரசு சமீப காலமாக உளவு பார்க்கும் வேலையை தீவிரமாக செய்து வருகிறது. மத்தியில் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வது மற்றும் மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா பயன்படுத்திய ஆயுதங்களில் இந்த உளவு விவகாரமும் ஒன்று. 

என்னை உளவு பார்த்த மத்திய அரசு, இறுதியில் என் மீது தொலைபேசி ஒட்டு கேட்பு புகாரை கூறியது. அது குறித்து சி.பி.ஐ. விசாரணையும் நடத்தப்பட்டது. இதன் மூலம் அக்கட்சி மனசாசட்சிக்கு விரோதமாக நடந்து கொண்டது. ஆட்சி அதிகாரத்தை பிடிக்க பா.ஜனதா எந்த நிலைக்கும் செல்கிறது. இது அபாயகரமானது. அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களின் தனிப்பட்ட விஷயங்களை உளவு பார்த்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் பொதுமக்களின் தனிப்பட்ட விஷயங்களையும் பா.ஜனதா உளவு பார்க்கும். அந்த நாள் வெகுதூரம் இல்லை. பா.ஜனதாவின் இத்தகைய மோசமான நிலையை கண்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு குமாரசாமி அதில் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து