மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிபு

Arasu-16

Source: provided

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் வெளியானதை தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தயாராகி வருகின்றனர்.

மேலும் இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை ஜூலை 26 ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என்று அறிவித்திருந்தார். இருந்தபோதிலும் சில பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை முன்பிலிருந்தே நடைபெற்று வருகிறது.

அதேபோன்று மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை கடந்த சில நாட்களாக நடைபெற்று கொண்டிருந்த நிலையில் தற்போது இதன் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தற்போது ஜூலை 30 ஆம் தேதி வரை மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதனால் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் மாணவர்கள் வருகிற 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து